நாவற்குழியில் இடம்பெற்றுவரும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களை உரியவர்கள் தடுப்பதற்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் எம் மண்ணை நாம் காப்பதற்காக நாம் நீதிமன்றத்தை நாடி சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்' என தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் சட்டதரணி ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும்கூறுகையில்,
'நாவற்குழியில் அரச காணிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள், அரசியல் பின்னணியைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. இருந்தும் அதுவொரு சட்டவிரோத குடியேற்றமாகும். இங்கு சட்டவிரோதமாக தங்கியிருக்கும் சிங்கள மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் சொந்த காணிகள் இருக்குமானால் ஏன் அங்கு செல்லவில்லை?
1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் இவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்ததற்கான போதிய ஆதாரங்கள் இருக்கவில்லை. இது திட்டமிட்ட அரசியல் உள்நோக்கங்களை கொண்ட திட்டமிட்ட சதியாகவே காணப்படுகின்றது. இது சதிமுயற்சியை யாழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இதற்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது' எனத தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’