வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஜூலை, 2010

வடக்கு கிழக்கில் 80,000 யுத்த விதவைகள்; அரசாங்கம் திருப்தியாக திட்டங்கள் எதையும் முன்னெடுக்கவில்லை: சஜித்

வடக்கு கிழக்கில் 80,000 விதவைகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டமெதனையும் அரசாங்கம் திருப்திகரமாக மேற்கொள்ளவில்லை என ஹம்பாந்தோட்டை மாவட்ட ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் கூறினார்.



விதவைகள் மற்றும் அநாதைகளுக்கான ஓய்வுதிய திருத்தச்சட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது:
"வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தலா 40,000 பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாகியுள்னர். உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் 25,000 விதவைகள் உள்ளனர்.
இப்பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு சார்பற்ற நிறுவனங்கள் பல செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ள போதிலும் அரசாங்கம் எந்தவொரு திட்டத்தையும் திருப்திகரமாக செய்யவில்லை.
இவ்விதவைகள் தொடர்பான சரியான தரவுகள் இல்லை. இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கம் ஜனாதிபதித் துரிதச் செயலணியொன்று நிறுவப்பட வேண்டும். இச்செயலணி யுத்தத்தினால் விதவைகளானோரின் விபரங்களை சிறந்தமுறையில் சேகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட வேண்டும்."

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’