வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 21 ஜூலை, 2010

வானில் தோன்றிய அதிசய பரிவட்டம்

இங்கிலாந்தின் போன்ஸ்மௌத் கடற்கரையில் ஓர் அதிசயம் வானில் நிகழ்ந்திருக்கிறது. சூரியனைச் சுற்றி அழகிய பரிவட்டமொன்று தோன்றியிருக்கிறது
.
கடந்த வாரமளவில் இந்தியாவிலும் இப்படியான பரிவட்டம் தோன்றியமை நினைவிருக்கலாம். இந்த சூரிய பரிவட்டத்தினை அங்குள்ளவர்கள் ஆவலுடன் பார்த்திருக்கிறார்கள். வானத்தில் எப்பொழுதாவது அரிதாகத்தான் இந்த சம்பவம் நிகழும்.
சாதாரண பொதுமக்கள் இந்த நிகழ்வு ஆண்டவனின் 'கடைக்கண் பார்வை' என்று குறிப்பிடுகிறார்கள். அதேபோல் மற்றும் சிலர் 'அரக்கனின் அகோரப் பார்வை' என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகிறார்கள் என்றால், வானத்திலுள்ள மேகங்களின் ஈரப்பதன் குளிர்ச்சியடைவதாலேயே இப்படி சூரியனைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும் என்று குறிப்பிடுகிறார்கள்.
அந்த அதிய காட்சியினை அங்குள்ள ஒரு புகைப்படப்பிடிப்பாளர் தனது கமெராவில் படமாக்கியிருக்கிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’