வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 டிசம்பர், 2009

ஒரே திசையில்


கண்கள் திறந்துதான் இருக்கின்றன
பார்வை மட்டும் உனக்கு
எப்போதும் ஒரே திசையில்,

தனிமை இருட்டில்
உனக்கே உனக்குச் சொந்தமான
மெல்லிதயக் கொடி தவித்துக்கிடக்கிறது,

மின்சாரக் கம்பம்
பாம்பின் வால்
புலியின் கால்
என்று எது அகப்பட்டாலும்
அவசரமாய்த் தொற்றித் தப்ப,

அப்போதும்
ஒரே திசையில்தான் உன் பார்வை
ஒட்டிக்கிடக்கப் போவதால்
நட்டமென்று ஏதுமில்லைதான்
உனக்கு.....

சந்திக்கவேண்டும்....... -----------------



--------------------------------------------------------------------------------

அவளைச் சந்திக்க வேண்டும்
என்ற உயிர்த்தவிப்பு
ரணப்பட்ட இதய அறைகளுக்குள்
ஓய்வெடுக்காமல்,
திணறல் மூச்சுக்களை
விட்டுக்கொண்டே இருக்கின்றன..
பின் அது ஓர்
எரிமலைக் குழம்பாய் உருமாறி
இரத்தக் குழாய்களில்
தீப்பிடித்துக்கொண்டு ஓடுகிறது..
தாங்கும் சக்தியை அவன்
வேக வேகமாய்
இழந்து கொண்டே இருக்கிறான்..
முழுவதும் இழந்ததும்
அவளைச் சந்தித்துவிடுவான்,
பின் அவள் அவனை
விட்டுப்போகவே மாட்டாள்....!!

மௌனமாய் - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...

மௌனத்தின் இதழ்களில்
ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்..

சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது.

தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்..

நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய்ச் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி...

_________________

ஞாயிறு, 15 நவம்பர், 2009

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி

மறப்பதை மறக்க வேண்டும் நினைப்பதை நினைக்க வேண்டும்
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்கக் கூடாது நினைப்பதற்கு முன் சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்கக் கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்கக் கூடாது.
அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது, உருவாக்கிய பின் அழிக்கக் கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக் கூடாது. நினைத்துவிட்டால் அழிக்கக் கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை, தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதலில் எது என்பதை அறிந்து விடு, அறிய முதலில் சிந்திக்கத் தெரிந்துகொள்.

கற்றதைப் புதைத்துவிடாதே, புதைப்பது என்றால் கற்று விடாதே;
நல்லதைக் கற்றக்கொள், எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே, விஷயத்தில் கவனம் எடு.

கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தைச் சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒரு முறை, சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே, குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீண்டு விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.

நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான், வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வுதான் என்று துள்ளி விடாதே, துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதாளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னைத் தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்

பாதாளத்தில் போக வேண்டுமா என்று துள்ளு முன்னர் சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே, சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய், முகம் மலர்நதல் அகம் மலரும்
அகம் மலருதே என்று மதிக்காமல் நடக்காதே.

மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்க மாட்டார்கள்.
சிந்திக்கா விட்டால்உனக்கு மதிப்பிருக்காது.
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்கக் கற்றுக்கொள்.

அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால் தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்.
அதனால்...

சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.

rahini

வெள்ளி, 13 நவம்பர், 2009

புரியாத கனவு...


புரியாத கனவு...

புதிர் போலானது என் வாழ்வு.
கேள்விக்குறியின் முதுகில்
பரந்த பாலைவனங்களில்
என் பயணிப்பு.
விடையே இல்லாத
கேள்விகள் போல
வெறும் கீறிட்ட கோடுகள்
நிறையவே.

எதிர்காலத்தின் முன்னால்...
எழுத்துக்கள் தொடர மறுக்கிறது.
தொடர்ந்த சிந்தனையை
முடிக்க முடியவில்லை.
கொஞ்சம் தண்ணீர்
குடித்துக் கொள்கிறேன்.

என்றாலும்
எப்போதுமே
வேதனைகள்
வெந்து தணிந்த பிறகு
எல்லையற்ற கற்பனைக்குள்
மனம் சுற்றிப் பறக்கும்.

விடியாத வாழ்வே ஆனாலும்
பசியால் வாடிய போதும்
உலகமே வெறிச்சோடி
தனித்து விடப்பட்ட போதும்
எனதென்று யாருமே
இல்லையென்று ஆனபோதும்
கனக்கின்ற மனம் நிரம்பி
கண்ணீராய் வழிந்தபோதும்
கனவில் வரும்
கற்பனைக்கு மட்டும்
கணக்கேயில்லை.

ஒரே ஒரு கனவு
திரும்பத் திரும்ப
ஒவ்வொரு நாளும் வரும்.
ஒளவைப் பாட்டிக்கு
அடுத்தாற்போல்,
நீல் ஆம்ஸ்ட்ராங் போல்,
நானும் ஓர் நாள்
நிலவில் நின்று
கொடி நட்டு...கை தட்டி
காற்றில் மிதப்பதைப் போல.

அப்படிக் கனவிலும்
ஓர் திடுக்காடு.
மனிதர்களைப் போல
நிலவுக்கும் மறுபக்கம்
இருந்துவிட்டால் !!!

ஹேமா(சுவிஸ்)

மொழிபெயர்த்த காதல்...

மொழிபெயர்த்த காதல்...

சங்கீதக் காற்றும் சல்லாபமுமாய்
சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
புதைக்கப்பட்டிருந்தது
என் புதிய வீணை ஒன்று.

மீட்டெடுத்து
தூசு தட்டி
பட்டாடை போர்த்தி
பளிங்கு மேடையில் அமர்த்தி
மீண்டும் மெல்ல
மீட்டும் நிலைக்குக்
கொண்டு வந்து
பத்தின் வருடங்கள்.

மௌனத் தெருவில்
துணிவோடு
மறுபடியும் தடம் பதித்து
மொழி மறந்த காதலை
மொழி பெயர்த்து
பதிப்பில் இட்டவன் நீ.

தவழும் காற்றைப் பற்றியும்
அடை மழை பற்றியும்
புல்லரிக்கும் பாடல் பற்றியும்
எம் இனத்தின் அழிவு பற்றியும்
காதோடு இரகசியமாய் பேசிய

நீ.......

நிலவின்
இருப்பிடம் தேடி வரும்
வானமாய் வருகிறாய்.
அழும் குழந்தையை
ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
உன் வரவு.
வா என் அன்பே...
காத்திருக்கிறேன் காதலொடு !!!


ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

வலைப்பூ என்னும் கடலில் கவிதை







வலைப்பூ என்னும் கடலில் கவிதை தேடி முக்குளித்த பொது கவிஞரே வந்து கை குலிக்கிக் கொண்டான் face book முலம் அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் அனுமதியுடன் புடம் போட்டு தருகின்றேன் தனி பதிவாக இடுகின்றேன்
கடல் தன் அலைகளைக் கொஞ்சம் நிறுத்தி
வானமெங்கும் விரவிக் கிடக்கிற உன் வட்ட
முகத்தைத் தன்னில் விரிக்கிறது............
மழை தன் தூறலுக்குப் பல வண்ணங்களை அடித்துத்
தன்னை மறந்து கிடந்த மாலைப் பொழுதொன்றில்..........
எனைப் பார்த்து வழக்கமாய்த்தான்
இமைத்திருக்...கும் உன் விழிகள்.............
என்னுலகில் மட்டும் ஏனடி இத்தனை திருவிழாக்கள்???
நீண்ட இரவுகளில் இதழ் மூடிக் குவிந்த மொட்டுக்கள் காலையில் நீ எழுந்து நடக்கையில் மலர்ந்து சிரிப்பதை நான் பார்த்தேன்...........முன்னிரவில் வெள்ளொளி பரப்பிக் கிடந்த முழுநிலவின் விளிம்புகள் உனைக் கண்டதும் வெட்கத்தில் ஒரு முகிலுக்குள் ஓடி றைந்தன..........
உன்விழி பார்த்த கணங்களில் வழிமாறிய
நதியொன்று என் வாசலில் வழிந்தோட.............

பின்னர் வருகிற பொழுதொன்றில் உன் இதழ்
பற்றும் கனவுகளில் துள்ளிக் குதித்து உடைந்தன
என் வீட்டுத் தேநீர்க் கோப்பைகள்..........

உன் நினைவுகளை ஏந்தியபடி மெல்ல
உதிக்கிறது எனக்கான உலகம்.................

முன்னொரு நாளில் நான் இறந்ததை
எண்ணியபடி மண்ணுக்குள் புதைந்திருந்தேன்....
மௌனத்தை அடைகாத்துக் கல்லறையின்
இருட்டறையில் கடைசியாய் நான் தள்ளப்பட்டேன்....
fgfdh
நன்றி கவிதை தந்த நண்பனுக்கு ;அறிவழகன் கைவல்யன்

புதன், 23 செப்டம்பர், 2009

சித்திரம் அல்லடி நீ எனது உயிர்ச் சிற்பமடி.. (கவிதை


என் காதல் கதவினை
திறந்து உள் நுழைந்து
உவகையுடன் வீற்றிருக்கும்
உன்னதமான பெண்மனியே
உன் இனிமை சிரிப்பை
உள்ளம் ரசித்த நாள் முதல்
உவர்ப்பு கசப்பாக இல்லையடி
காம்பை விட்டு உதிர்ந்த மலர்களும்
கமகமவென்று வாசம் தருவது போல்
கட்டுக்கடங்காத என் துடிப்பு
கன்னி உன்மீது பட்டு விட்டதால்
காவியங்கள் பல படைக்க ஒர் துடிப்பு
தேகத்தில் ஊர் புத்துணர்ச்சி
தெம்பாக இருக்கிறது இந்த இன்பமும்
தெளிந்த நீர்போல் என் மனம்
தெளிவாக உள்ளதடி..
உன் குரலின் உச்சரிப்பில்—புது
உலகம் உருவானது போல்
உள்ளத்தில் உண்மையான தவிப்பு
உதயமானதே என்னுள்…

தென்றல் போன திசையில்
உற்று நோக்கினேன்—இனிமை
தென்னங்கீற்று எனை அள்ளிப்போனது போல்
தேகத்தை கிள்ளிப்பார்தேன்—அது கனவில்லை

தேன்சொட்டச்செட்ட
தொங்கிடும் தேன்கூடுபோல்
உனை கிட்டகிட்ட பார்க்கையிலே
வட்டம் வட்டமாய் பல கண்விழித்த கனவுகள்

அதிகாலை பொழுதினில்
புல்லில் படரும் பனித்துளி
அதில் ஓர் விம்பம்
அது வேறு யாருமில்லை
எனது சிந்தையில் இருக்கும்
என் உயிர் சிற்பமே

திசைகள் மறந்தாலும் -உன்
வாசம் வரும் உன் திசை -எத்திசை என்று
அத்திசை என் சிந்தையால் உதிக்கும் திசை
அப்போ என் உதட்டில் பலரும் புன்னகை

சித்திரம் நீ அல்லடி -உன் மனதில்
முத்திரை பதித்த என் உள்ளம்
விசித்திரமாய் ஓர் இன்ப துடிப்பு -உனை
உச்சம் தலையிலிருந்து
உள்ளங்கால் வரை கண்ணால் ஓர் அளவீடு

வார்த்தையில் வல்லினம் இல்லை
வர்ண நகைகள் உன்மீது nஐhலிக்க வில்லை
வற்றாத உன் மெய்ச்சிரிப்பை நினைக்கயிலே
வகைவகையான கனவு வருகுதடி

உயிர் சிற்ப்பமே உனை
சிந்தையில் வைத்து காக்க
சீற்றமில்லாத கண்சிமிட்டல்—வேண்டுமடி
கனவில் மட்டுமல்ல— நேரிலும் தான்
காத்திருப்பேன்…காத்திருப்பேன்…
நேசமுடன்.. கிளியின் ஓர்கிராமத்து நாயகன்.. வவிதரன்

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

நான் வலைப்பூ என்னும் கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள்


நெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு


கொட்டாஞ்சேனைக் கோவிலிலே
வசந்த மண்டப வாசலிலே
பக்தியோடு நின்றேனே
பாவை ஒருத்தி வந்தாளே
ஓரக் கண்ணால் பார்த்தாளே
என்னை இழந்தேனே – நான்
காதலில் விழுந்தேனே.

சோதனைச் சாவடி யொன்றிலே
கால்கடுக்க நின்றேனே
பின்னால் வந்து நின்றாளே
உரசி உரசி அசைந்தாளே
ஒத்தடங்கள் தந்தாளே
எப்படிச் சொல்வேனோ-சுகம்
என்ன வென்பேனொ

யாழ் செல்லும் விமானத்திலே
அருகில் வந்து அமர்ந்தாளே
அறிமுகமாய் ஆனோமே
ஒரு முகமாய் போனோமே
எப்படி மறப்பேனோ – அதை
என்றும் மறவேனே.

வெள்ளவத்தைக் கடலருகே
தாழை மர நிழலடியே
கொஞ்சிக் குலவி மகிழ்ந்தோமே
எம்மை மறந்து இருந்தோமே
சுகம் பல கண்டோமே
சுவை பல கொண்டோமே

பம்பலப்பிட்டி சந்தியிலே
பஸ் தரிப்பின் பின்னாலே
காத்து காத்து நின்றேனே
கன்னியங்கு வந்தாளே
கையில் ஒரு கவருடனே - தன்
கல்யாண அழைப்பிதழ் என்றாளே – என்
நெஞ்சில் வெடித்த குண்டு கிளமோரே!
அடி இது முறையோ அடி இது தகுமோ
 

நான் வலைப்பூ என்னும் கடலில் முழ்கி எடுத்த முத்துக்கள் .2


கவிதை : காதல் வழிப்போக்கன்

freida-pinto4
ஒவ்வொரு கவிதை
முடிவிலும்,
உன்னை இன்னும் அதிகமாய்
நேசிப்பதாய் உணர்கிறேன்.
அதற்காகவே
இடை விடாமல் எழுதத் துடிக்கிறேன்.
freida-pinto4
உன் உதடுகளை
என் உதடுகளால்
பிரதி எடுக்க
பிரியப்படுகிறேன்.
நீயோ
அதற்கு இன்னோர்
பிறவி எடுக்கச் சொல்கிறாய்
freida-pinto4
மறந்து போயிருந்த
ஒரு
இதயம் கொத்திய
பழைய பாடலை
இரவின் நிசப்தத்தில்
மெல்லிய சப்தத்தில் கேட்டேன்.
உன்
ஞாபகம் கொத்திக் கிளறுகிறது.
freida-pinto4
ஒவ்வொரு முறை
நீ
பார்வைத் தூரிகை தொட்டு
என்னை
வரையும் போதும்
அழிந்து கொண்டிருக்கும்
ஓவியமாய் நான்.
freida-pinto4
பட்டென்று கட்டிக் கொள்ளும்
ஓர்
குழந்தையின்
குரங்கு பொம்மையாய்
நீ.
ஏக்கத்தோடு எட்டிப்பார்க்கும்
கடைவீதியின்
கடைக்குட்டி குழந்தையாய்
நான்.
freida-pinto4
உதயம் காணக் காத்திருக்கும்
ஓர்
குடுட்டுப் பிச்சைக்காரனின்
இடுப்புப் பையில்
இடறிய காசு
காதலின் கனவுகள்.
freida-pinto4
என் வீட்டுக் கண்ணாடி
உனக்கான
என்னைக் காட்டுகிறது.
உன் காதல் மட்டுமே
நான் என்ற
என்னைக் காட்டுகிறது.
freida-pinto4
முள்ளை முள்ளால் தான்
எடுக்க வேண்டும்.
என் காதலை
உன் காதலாலும்.
freida-pinto4
செலவழித்தால்
சேரும்,
சேர்த்து வைத்தால்
தொலைந்துபோகும்…
ஓர்
வியப்பின் விதை
காதல்.
freida-pinto4
நாம் இருவரும்
எதைப்பற்றித் தான் பேசவில்லை
மனதுக்குள்
பற்றிக் கொண்டிருந்த
காதலைத் தவிர..
freida-pinto4
கருவாட்டுக் கூடையில்
தலைவைத்துத்
தூங்கும் மீன்காரி போல,
உன்
நினைவுக் கூடைக்குள்
தலை வைத்துப் படுக்கவே
பிடித்திருக்கிறது
எனக்கு.
freida-pinto4
நீ
பேச மறுத்த
காலங்களில் தான்
என்
கவிதைகள் அதிகமாய்
பேசின.
freida-pinto4
ஆணி கிழித்த
காயத்தைத்
தேன் பூசி மறைப்பதாய்
இருக்கிறது
நீ
காதலை நிராகரித்து
நட்பை நீட்டும் போது.
freida-pinto4
ஒரு
பூவோடு வந்து
பூ பிடித்திருக்கிறதா
கேட்டாய்.
ஆம் என்றேன்.
பூ தானே
பூவைப் பிடித்திருக்கிறது.
0