
--------------------------------------------------------------------------------
அவளைச் சந்திக்க வேண்டும்
என்ற உயிர்த்தவிப்பு
ரணப்பட்ட இதய அறைகளுக்குள்
ஓய்வெடுக்காமல்,
திணறல் மூச்சுக்களை
விட்டுக்கொண்டே இருக்கின்றன..
பின் அது ஓர்
எரிமலைக் குழம்பாய் உருமாறி
இரத்தக் குழாய்களில்
தீப்பிடித்துக்கொண்டு ஓடுகிறது..
தாங்கும் சக்தியை அவன்
வேக வேகமாய்
இழந்து கொண்டே இருக்கிறான்..
முழுவதும் இழந்ததும்
அவளைச் சந்தித்துவிடுவான்,
பின் அவள் அவனை
விட்டுப்போகவே மாட்டாள்....!!













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’