மௌனத்தின் இதழ்களில்ஓயாத பேச்சுகளாய்
நீயும் நானும்..
சந்திக்கும்போது
நம் இதழ்கள் பொழியும் பேச்சு மழையோ
மையப்புள்ளியை நனைத்துவிடாமல்
ஓரடியேனும் தள்ளிப் பொழிவதிலேயே
கவனமாய் இருக்கின்றது.
தூரத்தில்தான் மழையென்றாலும்
சாரலும் தவறிவிழும் சிறு தூறலும்
இதயம் நனைக்காமலா போகும்..
நனைந்தும்
நனையாததுபோன்ற கள்ளத்தனத்தில்
ஆடுமிந்த கண்ணாமூச்சி
உயிர்ப்புடையதாய்ச் சிலிர்த்துச் செல்கிறது
நகரும் நாட்களைத்
தேன்வழியும் புதுப்பூந் தேரோட்டமாக்கி...
_________________













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’