மொழிபெயர்த்த காதல்...

சலித்தெடுத்த அந்தப்புரத்தில்
புதைக்கப்பட்டிருந்தது
என் புதிய வீணை ஒன்று.
மீட்டெடுத்து
தூசு தட்டி
பட்டாடை போர்த்தி
பளிங்கு மேடையில் அமர்த்தி
மீண்டும் மெல்ல
மீட்டும் நிலைக்குக்
கொண்டு வந்து
பத்தின் வருடங்கள்.
மௌனத் தெருவில்
துணிவோடு
மறுபடியும் தடம் பதித்து
மொழி மறந்த காதலை
மொழி பெயர்த்து
பதிப்பில் இட்டவன் நீ.
தவழும் காற்றைப் பற்றியும்
அடை மழை பற்றியும்
புல்லரிக்கும் பாடல் பற்றியும்
எம் இனத்தின் அழிவு பற்றியும்
காதோடு இரகசியமாய் பேசிய
நீ.......
நிலவின்
இருப்பிடம் தேடி வரும்
வானமாய் வருகிறாய்.
அழும் குழந்தையை
ஆழத் தூங்க வைப்பதாயிருக்கும்
உன் வரவு.
வா என் அன்பே...
காத்திருக்கிறேன் காதலொடு !!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’