வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கல்முனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கல்முனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 மே, 2012

கல்முனை உவெஸ்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் நேற்று இடம்பெற்ற விபத்தில் மரணமானார்.



ம ட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச்சம்பவத்தில் கல்முனை உவெஸ்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் பொ.முருகையா ( 64 வயது )அவர்கள் ஆபத்தான நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

சிவில் சேவைக்கு இராணுவத்தினர் பங்களிப்பு அவசியமில்லை: உதவி பொலிஸ் அத்தியட்சகர்

சி'வில் சேவைக்கு இராணுவத்தினர் பங்களிப்பு அவசியமில்லை. இராணுவத்தினர் ஊருக்குள் வருவதை நாங்கள் விரும்பவுமில்லை' என கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் தெரிவித்தார்.

ஞாயிறு, 12 டிசம்பர், 2010

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழா

கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெற்ற க.பொ.த.சாதாரணதர மாணவர் தினவிழாவின் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்பைசல் காசிம் ,கல்லூரி அதிபர் எம்.எம்.இஸ்மாயில் மற்றும்

தீ மூட்டிக்கொண்ட நபர் உயிரிழந்தார்

கல்முனை கடற்கரை வீதியிலுள்ள ஐஸ் தொழிற்சாலைக்கு அருகாமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் தனக்குத் தானே ஒருவர் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளார்.

சனி, 23 அக்டோபர், 2010

5500 அபின் பக்கற்றுகளுடன் மூன்று வர்த்தகர்கள் பொலிஸாரால் கைது

கல்முனையில் கஞ்சா கலந்த 5500 மதன கோகன அபின் லேகிய பக்கற்றுகளை விற்பனை செய்த 3 வர்த்தகர்களை இன்று மாலை களுவாஞ்சிக்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சனி, 2 அக்டோபர், 2010

தவறை மறைப்பதற்காகவே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது: சந்திரமோகன்

கடந்த புதன்கிழமை கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற, 27 பேரினால் மட்டும் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் ஒரு திட்டமிட்ட செயல் எனவும், அரசியல் பின்னணியில் இடம்பெற்ற செயல் எனவும், குறிப்பிட்ட வைத்தியர் ஒருவரின் தவறை மறைப்பதற்காகவுமே ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது எனவும் ஆதார வைத்தியசாலையின் நலன்புரிச்சங்க உபதலைவர் ரி.சந்திரமோகன் தெரிவிக்கின்றார்

கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம்

புதன்கிழமை கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்னால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது கல்முனை ஆதார வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றக் கோரி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. இவ் ஆர்ப்பாட்டத்தில், 50 பேர் அளவிலான ஒரு குழுவினர் கலந்துகொண்டனர் . காலை 9.30 மணி அளவில் ஆரம்பமாகி 10.30 வரை ஆர்பாட்டம் நடை பெற்றது

புதன், 22 செப்டம்பர், 2010

கல்முனையில் இன்று வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம்

கல்முனையில் வாகன விபத்து ஒருவர் பலி இருவர் படு காயம் இச்சம்பவம் இன்று அதிகாலை கல்முனை போலீஸ் நிலையமருகில் இடம்பெற்றது

திங்கள், 20 செப்டம்பர், 2010

சட்டவிரோத மீன் பிடியாளரை காத்திருந்து கைது செய்த அதிரடிப் படையினர்

கல்முனை பிரதேசத்தில் டைனமோ போன்ற தடுக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இன்று அதிகாலை முதல் மாலை வரை காத்திருந்து கைது செய்தனர்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

கல்முனையில் கரையொதுங்கிய சடலம்

5மஸ்ஜிதுல் பலாஹ் தைக்காவிற்கு அருகாமையிலுள்ள கடற்கரையோரம் இன்று காலை சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளது.

வியாழன், 22 ஜூலை, 2010

அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் தேங்காய்க்குள் ஆறு விரல்கள்

தேங்காய்க்குள் ஆறு விரலுடன் கை உருவம் ஒன்று இருந்த அதிசயம் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

செவ்வாய், 20 ஜூலை, 2010

தாய்க்கும் மகன்களுக்கும் மரணதண்டனை: கல்முனை மேல்நீதிமன்றம் தீர்ப்பு

சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் தாய் ஒருவருக்கும் அவரின் இரு மகன்களுக்கும் கல்முனை மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

செவ்வாய், 22 ஜூன், 2010

சுனாமியால் வீடுகளை இழந்த கல்முனை மக்களுக்கு இன்று வீடுகள் கையளிப்பு

கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிற்குள் சுனாமியால் வீடுகளை இழந்த மக்களுக்கென கட்டப்பட்ட வீடுகளில் 100 வீடுகள் மக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டதாக அங்கிருந்து  இணையதளத்திற்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதன், 23 டிசம்பர், 2009

ஜெனரல் சரத்பொன்சேகா பங்குபற்றும் பொதுக்கூட்டம் கல்முனையில்-ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்-


எதிர்வரும் 24ம் திகதி எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் சரத்பொன்சேகா பங்கேற்கும் பொதுக்கூட்டம் அம்பாறை மாவட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் தாம் திருப்தியடைந்துள்ளதாகவும் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 12 நவம்பர், 2009

கல்முனையில் ரூ. 44 லட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுக்கள் பறிமுதல்

கொழும்பிலிருந்து சட்டவிரோதமாக கல்முனைப் பிரதேசத்திற்குக் கொண்டுவரப்பட்ட சுமார் 44 லட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்களைப் பொலிஸார் இன்று காலை 9.00 மணியளவில் கைப்பற்றியுள்ளனர்.

மினுவாங்கொடை வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான லொறி ஒன்றில் கோழித்தீன் ஏற்றிவந்த சாக்குகளுக்கு இடையில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகக் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே, கல்முனை தரவைக் கோயில் சந்தியில் வைத்து லொறியைத் தாம் இடைமறித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை பொலிஸ் நிலையத் தலைமைப் பரிசோதகர் பி.ஏ.எஸ். சிரான் பெரேரா தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்தச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

லொறி சாரதியும் உதவிக்கு வந்த நபர் ஒருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சிரான் பெரேரா மேலும் தெரிவித்தார்.

திங்கள், 9 நவம்பர், 2009

அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை


அம்பாறை மாவட்டம் கல்முனை மருதமுனைப் பகுதியில் முதலை ஒன்றினை பிரதேச மக்கள் பிடித்துள்ளனர். குறித்த பகுதியிலுள்ள குளமொன்றிலிருந்து மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதிக்கு வந்தபோதே இன்று அதிகாலையில் குறித்த முதலையினைப் பிரதேச மக்கள் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முதலையானது பிரதேசத்திலுள்ள மக்களைத் தாக்க முற்பட்ட போதே மடக்கிப் பிடிக்கப்பட்டதோடு பின்னர் விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திங்கள், 2 நவம்பர், 2009

கல்முனை, காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட வீதியில் மழை நீர் தேங்கியுள்ளமையால் பாதிப்பு


கல்முனை மாநகர சபைக்கும், காரைதீவு பிரதேச சபைக்கும் இடைப்பட்ட மாளிகா வீதி முறையான வடிகால் வசதியின்றி மழைநீர் வெள்ளமாக தேங்கி நிற்கின்றது.

இதனால் இவ்வீதியால் போக்குவரத்து செய்வதில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

இவ்வீதியின் அருகில் வைத்தியசாலை, பாடசாலை என்பனவும் அமைந்திருக்கின்றன. சம்மந்தப்பட்டவர்கள் இவ்வீதியின் பிரச்சினையை தீற்க்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.