வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 ஆகஸ்ட், 2011

சிவில் சேவைக்கு இராணுவத்தினர் பங்களிப்பு அவசியமில்லை: உதவி பொலிஸ் அத்தியட்சகர்

சி'வில் சேவைக்கு இராணுவத்தினர் பங்களிப்பு அவசியமில்லை. இராணுவத்தினர் ஊருக்குள் வருவதை நாங்கள் விரும்பவுமில்லை' என கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் தெரிவித்தார்.
கல்முனை பொலிஸ் நிலையத்தில் துறைநீலாவனைப் பிரதேச மக்களுடன் மர்ம மனிதன் தொடர்பாக நடைபெற்ற கலந்துரையாடலொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். இக்கலந்துரையாடலின்போது 'மர்ம மனிதன் சம்பவங்களின்போது இராணுவத்தினர் வேண்டாம். ஏனெனில் மர்ம மனிதன் என்ற பயங்கரம் தோன்றும் போது அல்லது அவனை பிடிக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போதும் அவ்விடத்திற்கு சொல்லி வைத்தாற் போல் இராணுவத்தினர் வருகின்றனர். இதன் மர்மம் என்ன? வேறு சில இடங்களில் இராணுவத்தினரே மர்ம மனிதனை பாதுகாப்பவர்களாக இருக்கின்றனர். அவர்களில் எமக்கு நம்பிக்கை இல்லை அதனால் பொலிஸார் தான் வேண்டும்' என கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் பிரதேசவாசிகள் முறையிட்டனர். இதற்கு பதிலளிக்கும்போதே உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'இராணுவத்தினர் அண்மையில் ஊருக்குள் வந்தமைக்கு உங்களில் சிலர் தான் காரணம். இனிமேல் இராணுவத்தினர் வராமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்' எனவும் அவர் உறுதியளித்துள்ளார். 'இப்பிரதேசத்தில் அன்மையில் ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பான பிரச்சினையில் சிலர் முறைகேடான முறையில் துறைநீலாவனை பொலிஸ் காவலரன் மீது கல் வீச்சு நடத்தியுள்ளனர். இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த இடத்திற்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்' எனவும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’