திமுகவை அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்ட திமுக இளைஞர் அணி, மாணவர் அணி சார்பில் சமச்சீர் கல்வி வெற்றி விழா பொதுக்கூட்டம் காஞ்சீபுரம் கச்கபேஸ்வரர் கோவில் அருகே நடைபெற்றது. அதில் பேசிய ஸ்டாலின், பணகார மாணவர்கள், ஏழை மாணவர்கள் என தரம் பிரிக்காமல் அனைவருக்கும் சமமான கல்வி வழங்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை திமுக அரசு கொண்டு வந்தது. ஆனாஸ், அதிமுக அரசு பதவியேற்ற உடன் சமச்சீர் கல்வியை முழுவதுமாக தடை செய்தது. திமுக அரசு கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே ஜெயலலிதா அதை தடை செய்தார். ஆனால் சுப்ரீம் கோர்ட் சமச்சீர் கல்வியை உடனடியாக அதை அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. அதிமுக அரசு வேண்டுமென்றே திமுகவினர் மீது பொய் வழக்குபோட்டு பழிவாங்கி வருகிறது. மிசா காலத்திலேயே சிறைச்சாலையை கண்டு அஞ்சாத நாங்கள் இந்த பொய் வழக்குகளைக் கண்டு அஞ்சமாட்டோம். திமுகவை அழிக்க நினைப்பவர்களே அழிந்து போவார்கள் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’