வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 ஆகஸ்ட், 2011

இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்டுகிறது பி.ஜே.பி.

லங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்காக பாரதிய ஜனதா கட்சி (பி.ஜே.பி.) சென்னையில் நிதிதிரட்டும் நடவடடிக்கையில் ஈடுபட்டுள்ளது. ஓகஸ்ட் 25 ஆம் திகதிவரை இந்நிதி திரட்டும் நடவடிக்கை தொடரும் என அக்கட்சியின் தேசிய நிறைவேற்றுக்குழு அங்கத்தவரான எல். கணேசன் தெரிவித்துள்ளார்.
25 ஆம் திகதி தமிழ் நாடு மாநில பி.ஜே.பி. அங்கத்தவர்கள் நிதி திரட்டுவதற்காக வீதிப்பிரசாரங்களில் ஈடுபடுவார்கள் எனவும் பின்னர் ஏனைய மாவட்டங்களுக்கும் இந்நடவடிக்கை விஸ்தரிக்கப்படும் எனவும் எல். கணேசன் கூறியுள்ளார். இறுதியில், இலங்கையில் இம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சேவா இண்டர்நெஷனல் எனும் அமைப்பிடம் இந்நிதி கையளிக்கப்படும் எனவும் அவர் கூறினார். அண்மையில் சென்னைக்கு விஜயம் செய்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் நிதின் கட்காரி இலங்கைத் தமிழர்களுக்காக 10 லட்சம் இந்திய ரூபா வழங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக எல். கணேசன் மேலும் கூறுகையில், இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு நிவாரணம் வழங்குவது வெளிவிவகார அமைச்சுக்குட்ட விடயமாகும். எனவே இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக செயற்படும் தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் இதற்கு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்த மாத்திரமே முடியும். காங்கிரஸும் பி.ஜே.பி.யும் மாத்திரமே இதை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளன. ஆனால் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஐக்கயி முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தும் நிலையில் காங்கிரஸ் எதுவும் செய்வதில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் உதவியது' என்றார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூவருக்குமான மரண தண்டனையை ரத்துச் செய்யுமாறு இந்திய மத்திய அரசை வலியுறுத்துமாறு அனைத்து கட்சிகளும் ஏக மனதாக தமிழக முதலமைச்சரிடம் கோர வேண்டும் என வைகோ கூறியிருப்பது குறித்து கேட்டபோது, இவ்விடயத்தில் பி.ஜே.பி. மத்திய குழு கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்ளும் என கணேசன் பதிலளித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’