வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 செப்டம்பர், 2010

சட்டவிரோத மீன் பிடியாளரை காத்திருந்து கைது செய்த அதிரடிப் படையினர்

ல்முனை பிரதேசத்தில் டைனமோ போன்ற தடுக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஒருவரை காரைதீவு விசேட அதிரடிப் படையினர் இன்று அதிகாலை முதல் மாலை வரை காத்திருந்து கைது செய்தனர்
.
இது தொடர்பாக காரைதீவு விசேட அதிரடிப் படையின் நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ.பந்துல பெர்னாண்டோ தெரிவிக்கையில், "எமக்குக் கிடைத்த தகவலையடுத்து இன்று காலை எமது மோட்டார் சைக்கிள் பிரிவுப் படையினர் சீருடையின்றி கடற்கரைப் பள்ளிவாசலை அண்டிய பகுதியில் உள்ள மரங்களின் மேலேறி இரகசியமாக அமர்ந்து கொண்டு, தொலைக் காட்டி மூலம் மாலை வரை அவதானித்தனர். மாலை ஆறு மணியளவில் கரைக்கு திரும்பிய ஒருவரை அனைத்துப் பொருட்களுடன் கைது செய்துள்ளோம்" என்றார்.
மேலும் இரு படகுகளில் வந்தவர்களை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
கைது செயப்பட்டவரை, சட்டவிரோதமான பொருட்கள், பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் மீன் பிடி உபகரணங்கள் என்பவற்றுடன் இன்று இரவு 9.30 மணியளவில் கல்முனை பொலிஸாரிடம் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட பொருட்களோடு காரைதீவு விசேட அதிரடிப் படை நிலையப் பொறுப்பதிகாரி சீ.ஐ.பந்துல பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரை படத்தில் காணலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’