வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 2 பிப்ரவரி, 2013

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புகின்றது:


ல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கைக்கே அதிகளவு அக்கறையுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

திங்கள், 14 ஜூன், 2010

இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணுமாறு டில்லியிடமிருந்து எந்த அழுத்தமும் இல்லை - பீரிஸ்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதுடில்லி விஜயத்தின்போது இலங்கை இனநெருக்கடிக்கான அரசியல் தீர்வு தொடர்பாக இந்தியா எந்த அழுத்தமும் வழங்கவில்லையென வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

வெள்ளி, 26 மார்ச், 2010

ஜோன்ஸ்டன்,இந்திக்க இருவரின் பதவிகளும் ரத்தாகவில்லை:ஜீ.எல்.பீரிஸ் _

நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் வெற்றிடம் இல்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் பதவிகள் ரத்தாகவில்லை எனவும் அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

வியாழன், 11 மார்ச், 2010

இல.நிபுணர்கள் குழு நியமிக்கும் ஐ.நா. செயலரின் முடிவுக்கு, பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்பாம்: பீரிஸ்



இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளனவா என்று விசாரணை நடத்துவதற்காக நிபுணர்கள் குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்ற ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனின் யோசனைக்கு ஐ.நா. பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன என்று அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

புதன், 10 மார்ச், 2010

ஜீ.எஸ்.பி.பிளஸ் குறித்து பேச்சு நடத்த இலங்கை குழு பிரஸெல்ஸ் செல்லும்:ஜீ.எல்.பீரிஸ்

ஜீ.எஸ்.பி. பிளஸ் குறித்தும் ஏனைய விடயங்கள் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எதிர்வரும் வாரத்தில் இலங்கை குழுவொன்று பிரஸெல்ஸ் செல்லவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை ஊடகங்களுக்கு அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்து கூறுகையில்,

வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

ஜீ.எஸ்.பீ.பிளஸ் ஆறுமாத காலத்துக்கு கிடைக்கும்-ஜீ.எல்.பீரிஸ்


ஜீ.எஸ்.பீ.பிளஸ் வரிச்சலுகை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் கூற்றில் எவ்வித உன்மையும் இல்லை என்றும் அந்தச் சலுகை தொடர்ந்தும் கிடைத்து வருவதாகவூம் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சலுகை பெப்ரவரி 15ஆம் திகதி முதல் தொடர்ந்து ஆறுமாத காலத்துக்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

கெழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்தத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சலுகையை மேலும் நீடிப்பது குறித்து பரிசீலிப்பதற்கு இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த ஐரோப்பிய ஒன்றியம் எதிர்பாப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். _