வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 26 மார்ச், 2010

ஜோன்ஸ்டன்,இந்திக்க இருவரின் பதவிகளும் ரத்தாகவில்லை:ஜீ.எல்.பீரிஸ் _

நாட்டின் அரசியலமைப்புக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் வெற்றிடம் இல்லை எனவும் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய இருவரினதும் பதவிகள் ரத்தாகவில்லை எனவும் அரசாங்கம் நம்புவதாக அமைச்சரவைப் பேச்சாளரான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 
அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க தொடர்பாக விளக்கம் அளிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்தார்.
ஜோன்ஸ்டன் பெர்னான்டோ மற்றும் இந்திக்க பண்டாரநாயக்க ஆகிய இருவருக்கும் உரிய நிறைவேற்று அதிகாரத் தன்மை நாட்டின் அரசிலமைப்புக்கு ஏற்ப தொடர்ந்தம் நிலவுவதாக சட்டமா அதிபர் அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அத்தியாவசிய தேவையின் பொருட்டு அவசர காலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான முக்கிய கட்டமாக கூடும்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்றவர்களே அழைக்கப்படுகின்றனர். அத்துடன் புதிய நாடாளுமன்றம் என்ற வகையில் அவை கூடுவதில்லை.
அவ்வாறாயின் அதன் அடிப்படையில் நோக்கும் போது குறிப்பிடப்பட்ட இருவரினதும் அமைச்சுப் பதவிகள் ரத்தாகவில்லை என்றும் அவை தொடர்ந்தும் செல்லுபடியாகின்றது எனவும் அரசாங்கம் திடமாக நம்புகின்றது என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’