இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடருக்கான, 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.டோனி அணித்தலைவராகவும் , சேவக் துணை அணித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உலகக் கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 15 பேர் கொண்ட இறுதி அணி மும்பையில் தெரிவு செய்யப்பட்டது.
டோனி அணித்த்லைவர், சேவாக் துணை அணித்தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஹர்பஜன்சிங், ரவீந்திர ஜடேஜா, கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா, பிரவீன் குமார், சகிர்கான், ஆசீஸ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மா, யுவராஜ் சிங், யூசுப் பதான் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். புது முகங்களான வினய் குமார், பியூஸ் சாவ்லா ஆகிய இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.உலகக் கிண்ண தொடருக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 15 பேர் கொண்ட இறுதி அணி மும்பையில் தெரிவு செய்யப்பட்டது.
இதேவேளை எதிர்பார்க்கப்பட்ட இஷாந்த் சர்மா , ஆர்.பி. சிங், பிரயான் ஓஜா, கோஹ்லி, ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட வில்லை.
மூன்றாவதுஇருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர், மேற்கிந்திய தீவுகளில் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்ரேலியா உள்ளிட்ட 12 அணிகள் நான்கு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதுகின்றனர் . இந்திய அணி 'சி' பிரிவில் தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளுடம் இடம் பிடித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’