வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
அனுராதபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுராதபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 13 ஜூன், 2010

அனுராதபுரத்திலுள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று யுவதிகள் கைது!

அனுராதபுரம் பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்ற மூன்று யுவதிகளை அனுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதன், 17 மார்ச், 2010

பிரசவத்தின் பின்னர் தனது குழந்தையை தண்ணீர் நிரம்பிய குழியில் அமிழ்த்தி கொன்று சடலத்தைப் புதைத்த தாய்க்கு!!

பிரசவத்தின் பின்னர் தனது குழந்தையை தண்ணீர் நிரம்பிய குழியில் அமிழ்த்தி கொன்று சடலத்தைப் புதைத்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு அனுராதபுரம் உத்தரவிட்டுள்ளார். ரம்பாவ இக்கிரிகொல்லாவ பிரதேசவாசியான 25வயதுடைய அப்துல் ரசான் ரொகிலாபானு என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 09ம்திகதி வீட்டில் ஆண்குழந்தையொன்றை பிரசவித்த இவர் அதனைக் குழியொன்றில் தண்ணீரில் அமிழ்த்தி கொலைசெய்து சடலத்தை புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புதன், 17 பிப்ரவரி, 2010

அனுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி கடற்படை அதிகாரி மரணம்


அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள நாச்சடுவம் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த லெப்.கொமாண்டர் தர கடற்படை அதிகாரியே இவ்வாறு குளத்தில் மூழ்கிப் மரணமாகியுள்ளார்.

இவர் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது, குளக்கரையில் இவரது நண்பரான ஜக்சன் அன்ரனி என்ற சிங்கள நடிகரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மலோக தேரரும் உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திங்கள், 23 நவம்பர், 2009

அனுராதபுர துப்பாக்கிச் சூட்டில் ஐவர் காயம்


அனுராதபுரம் தஹய்யாகம சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐந்துபேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக அனுராதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இரண்டு தரப்பினரிடையே நிலவி வந்த முறுகல் நிலைமையை அடுத்தே துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து கைக்குண்டொன்று கண்டெடுக்கப்பட்டு குண்டு செயலிழக்கும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் செய்தவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் , அவரைக் கைது செய்ய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.