வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

அனுராதபுரத்தில் குளத்தில் மூழ்கி கடற்படை அதிகாரி மரணம்


அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இலங்கையின் கடற்படை அதிகாரி ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள நாச்சடுவம் குளத்தில் நீச்சலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை குறித்த லெப்.கொமாண்டர் தர கடற்படை அதிகாரியே இவ்வாறு குளத்தில் மூழ்கிப் மரணமாகியுள்ளார்.

இவர் நீச்சலில் ஈடுபட்டிருந்தபோது, குளக்கரையில் இவரது நண்பரான ஜக்சன் அன்ரனி என்ற சிங்கள நடிகரும், ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மலோக தேரரும் உடனிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’