வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 செப்டம்பர், 2012

மத்திய அரசுடன் இருந்துகொண்டு கிழக்கில் த.தே.கூ.வுடன் இணைந்து ஆட்சியமைப்பது சாத்தியமற்றது: மு.கா பிரதித்தலைவர்



மத்திய அரசாங்கத்தில் இருந்துகொண்டு கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பில் முடிவு எடுப்பதென்பது சாத்தியமற்றதாகவே இருக்கும். எவ்வாறாயினும் உறுதியான முடிவுடனேயே நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என' ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான காபீஸ் நஷீர் அகமர் சயினுலாப்தீன் தெரிவித்தார்.

திங்கள், 3 செப்டம்பர், 2012

எஸ்.எஸ்.பி. ரணகலவிற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்



அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரேமலால் ரணகலவிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொது செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, அக்கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் ஹனீபா (மதனி) மற்றும் கிழக்கு மாகாண சபை வேட்பாளர் எம்.தவம் ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர்.

சனி, 1 செப்டம்பர், 2012

'தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் இணைந்து செயற்படவில்லை'



எ திர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தாம் இணைந்து செயற்படுவதாக கூறப்படுவதை அவ்விரு கட்சிகளும் மறுத்துள்ளன. தற்போது நிலையில் உடன்படிக்கைகள் எதுவும் இல்லை எனவும் ஆனால் செப்டெம்பர் 8 ஆம் திகதி தேர்தல் முடிவடைந்தபின்னர், தெரிவுகள் குறித்து கருத்திற்கொள்ளப்படும் என அக்கட்சிகள் நேற்று கூறின.

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

கல்முனை மாநகர சபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியது

கல்முனை மாநகரசபையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. கல்முனை மாநகரசபைத்தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 22,356 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 9,911 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8,524 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 2,805 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வரவே மு.கா உருவாக்கப்பட்டது

ஆயுத போராட்டத்தில் ஈடுபடவிருந்த முஸ்லிம் இளைஞர்களை சமூக நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்காகவே தமது கட்சி உருவாக்கப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்தது.

புதன், 21 ஜூலை, 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை மேற்கொள்கின்றது: மு.கா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போலியான பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

சனி, 17 ஜூலை, 2010

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளது

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூடி ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சனி, 10 ஜூலை, 2010

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி

பொது தேர்தலுக்கு பின்னர் முதற் தடவையாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி கூடவுள்ளதாக அதன் செயலாளர் நாயகம் ஹசன் அலி இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

செவ்வாய், 15 ஜூன், 2010

கயந்த கருணாதிலகவுடன் பேச வேண்டிய அவசியம் இல்லை-பஷீர் சேகுதாவூத்

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் நியமணம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலகவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைமைத்துவம் பேச வேண்டிய அவசியம் இல்லை என்கிறார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்.

சனி, 8 மே, 2010

முஸ்லிம் காங்கிரஸிற்குல் மீண்டும் பிளவு?ஹசன் அலி மறுப்பு


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு பிரிந்து அரசுடன் இணைந்து கொள்ளவுள்ளர்கள் என்றும் இதற்கான முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருகின்றது என்று வாராந்த பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியிடம் இணையதளம் சற்று முன் தொடர்பு கொண்டு வினவியது.

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை _

காத்தான்குடிப் பகுதியில் இன்று அதிகாலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மாதர் அணிக்கான கிழக்கு மாகாண அமைப்பாளரான ஜனாபா ஸ்ல்மாஹம்ஸாவின் பிரசார வாகணம் எரித்து நாசமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பொலிஸ் விசாரணைகள் நடைப்பெற்று வருகின்றன.

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஜெனரல் பொன்சேகா பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது கட்சி ஏற்கனவே பொது வேட்பாளராக அங்கீகரித்திருந்தாலும் உத்தியோகபூர்வமாக கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் அவரைச் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் ரவுஃப் ஹக்கீம் எமக்குத் தெரிவித்தார்.

கட்சியின் தலைவரென்ற ரீதியில் முன்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் கட்சியின் உறுப்பினர்களுடன் மேலதிக விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர்சொன்னார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், நாட்டுக்குத் தகுந்த நேர்மையான ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நல்லதொரு முடிவை நாம் எடுத்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்