வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 6 டிசம்பர், 2009

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் ஜெனரல் பொன்சேகா பேச்சுவார்த்தை


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் கட்சி உறுப்பினர்களும் ஜெனரல் சரத் பொன்சேகாவும் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடவடிக்கைகள் மற்றும் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது கட்சி ஏற்கனவே பொது வேட்பாளராக அங்கீகரித்திருந்தாலும் உத்தியோகபூர்வமாக கட்சியின் அரசியல் அதி உயர்பீடம் அவரைச் சந்தித்து முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சனைகள் சம்பந்தமாகக் கலந்துரையாடியதாக கட்சியின் தலைவர் ரவுஃப் ஹக்கீம் எமக்குத் தெரிவித்தார்.

கட்சியின் தலைவரென்ற ரீதியில் முன்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தாலும் கட்சியின் உறுப்பினர்களுடன் மேலதிக விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக அவர்சொன்னார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளின் பின்னர், நாட்டுக்குத் தகுந்த நேர்மையான ஜனாதிபதி ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நல்லதொரு முடிவை நாம் எடுத்திருக்கிறோம் என்ற திருப்தி ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’