வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 செப்டம்பர், 2012

'தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் இணைந்து செயற்படவில்லை'



திர்வரும் மாகாண சபைத் தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தாம் இணைந்து செயற்படுவதாக கூறப்படுவதை அவ்விரு கட்சிகளும் மறுத்துள்ளன. தற்போது நிலையில் உடன்படிக்கைகள் எதுவும் இல்லை எனவும் ஆனால் செப்டெம்பர் 8 ஆம் திகதி தேர்தல் முடிவடைந்தபின்னர், தெரிவுகள் குறித்து கருத்திற்கொள்ளப்படும் என அக்கட்சிகள் நேற்று கூறின.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதுகுறித்து கூறுகையில், "ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் தற்போது உடன்படிக்கை எதுவும் இல்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வந்தால் நாம் கருத்திற்கொள்வோம். ஆனால் தேர்தலின் பின்னர் நாம் கருத்திற்கொள்ளக்கூடிய விடயம்" என்றார். இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான ரவூப் ஹக்கீக்கிடம் இது தொடர்பாக கேட்டபோது, இது தொடர்பாக இப்போதே கருத்துக்கூறுவது காலமுதிர்ச்சியற்றது எனத் தெரிவித்தர். "இத்தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனியாக போட்டியிடத் தீர்மானித்ததன் காரணமாக எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது. எனவே தேர்தலின் பின்னர் நாம் தெரிவுகள் குறித்து ஆராய்வோம்" என அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’