வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
வீரர் சனத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீரர் சனத் ஜயசூரிய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 ஜூன், 2011

இங்கிலாந்துடனான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு: சனத் ஜயசூரிய

ங்கிலாந்து அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியின் பின்னர் தான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 11 ஜனவரி, 2011

ஐ.பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்?

ஐ..பி.எல். போட்டியில் விளையாட ஆர்வமாக இருந்தேன், ஆனால்....... அதைப் பற்றி பேச விரும்பவில்லை என இலங்கையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

ஞாயிறு, 19 செப்டம்பர், 2010

மட்டு.வெடிப்புச் சம்பவம்: காயமடைந்தவர்களை பார்வையிட்டார் சனத்

ட்டக்களப்பு கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய ஆகியோர் இன்று பார்வையிட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்

ஞாயிறு, 16 மே, 2010

ஆட்டம் காணும் ஜெயசூரியாவின் ஆடுகளம் ..!


சனத் ஜெயசூரிய - இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சகலதுறை துடுப்பாட்ட வீரர்.30 June 1969 (age 40). மாத்தறையில் பிறந்தவர். ஆரம்பத்தில் பூளும் பீல்ட் அணிக்காக விளையாடி 1989-90 காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்பேணில் நடைபெற்ற ஒருநாட் போட்டியில் அறிமுகமானார்.

புதன், 17 பிப்ரவரி, 2010

ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் அரசியலில் காலடி எடுத்து வைத்தேன்:சனத்


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி எடுத்து வைத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்தி பெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தாது மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன்” என அங்கு மேலும் குறிப்பிட்டார்.

சனத் ஜயசூரியவை பெருமளவிலான மக்கள் திரண்டு வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள், 15 பிப்ரவரி, 2010

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட சனத் ஜயசூரிய முடிவு


இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என இலஙகை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.