
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சனத் ஜயசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பப் பத்திரத்தை விரைவில் சனத் ஜயசூரிய கையளிக்கவிருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அல்லது கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடமிருந்து சனத் ஜயசூரிய அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என இலஙகை கிரிக்கெட் சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’