வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

தமிழ் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 12 பேருக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கிடையாது?


இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 12 பேருக்கு இம்முறை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிக அரிதாக உள்ளதாகத் தெரியவருகிறது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தெரிவு செய்வது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்நாள் வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ அமைப்பின் செயலாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகிய ஐந்து பேரும் கலந்துகொண்டு தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆராய்ந்தனர்.

அப்போது அடுத்துவரும் நாட்களில் கட்சித் தலைவர்கள் மீண்டும் ஒன்று கூடி வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான பொறிமுறை குறித்து விரிவாக ஆராய்ந்து முடிவெடுக்கலாம் என்று இரா.சம்பந்தன் அங்கு கருத்துத் தெரிவித்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டதால் இனிமேல் நடைபெறவுள்ள புதிய வேட்பாளர் தெரிவு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களுக்கு இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த 22 பேரையும் அழைக்கும் நடைமுறை பின்பற்றப்பட மாட்டாது என்று கூட்டமைப்பின் உயர் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அதேவேளை, இதுவரை பா.உறுப்பினர்களாக இருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், என்.ஸ்ரீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், செல்வராஜா கஜேந்திரன், சிவநாதன் கிஷோர், கனகசபை, கனகரட்ணம், தங்கேஸ்வரி கதிர்காமன், சந்திரநேரு, ஜெயானந்தமூர்த்தி உட்பட குறைந்த பட்சம் 12 பேருக்கு இந்தத் தடவை வேட்பாளர் நியமனம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்தத் தலைவர் கோடிகாட்டினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’