
இலங்கையின் பழமை வாய்ந்ததும் பிரபல்யமானதுமான கோல்பேஸ் கோட்டலின் வாயில் வரவேற்பாளர் சட்டுக்குடான் இன்று தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.
146 வயதினைக் கொண்ட கோல்பேஸ் கோட்டலில் 1942ம் ஆண்டு தனது 22 வது வயதில் தன்னை இணைத்துக்கொண்ட சட்டுக்குட்டான் கடந்த 68 வருடங்களாக இடைவெளியின்றி தொடர்ச்சியாக பணிபுரிந்து வருகின்றார். இந்தவயதிலும் எவ்வித சோர்வுமின்றி சுறுசுறுப்பாக பணிபுரிந்துவரும் அவரை இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஓர் வரலாற்று பதிவாக பதிவுசெய்துகொண்டு செல்லுகின்றனர். இரண்டாம் உலகமகா யுத்தம் இலங்கையின் சுதந்திர தினம் முதலாவது பாராளுமன்ற அமர்வு காலிமுகத்திடல் சத்தியாக்கிரகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளை சிறிதும் பிசிறின்றி இன்றும் நினைவுகூரும் சட்டுக்குட்டான் தான் இப்போதைக்கு ஓய்வுபெறப் போவதில்லை எனவும் அதற்கு இன்னமும் பல வருடங்கள் உள்ளன எனக்கூறி அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கின்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’