வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

காதலர் தினத்தில் நடந்த உண்மைக்காதல் திருமணம்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது தனது இரு கண்களும் பாதிக்கப்பட்டு முற்றாக பார்வை இழந்த ராணுவ அதிகாரியான மேஜர் டுஷியந்த பெரேரா அவரது காதலியுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் தான் காதலித்தவர் முற்றாக பார்வையினை இழந்தபோதும் தான் விரும்பியவரையே மணம் முடிப்பேன் என கடைசிவரை பிடிவாதமாக இருந்து தனது பெற்றோரின் சம்மதத்துடன் மேஜர் பெரேராவை அவரது காதலி கரம்பிடித்துள்ளார். யுத்தத்தில் பார்வையினை இழந்தபோதும் வாழ்க்கையில் சோர்ந்துவிடாமல் விழிப்புலன் இழந்தோருக்கான கணணி கற்கை நெறியினை கற்று தற்சமயம் ரணவிரு செவன எனப்படும் வலுவிழந்த படைவீரர்களுக்கான மையத்தில் கணணி இயக்குனராக மேஜர் டுஷியந்த பெரேரா பணிபுரிவது மற்றுமோர் சிறப்பம்சமாகும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’