
தென்மாகாணம் அம்பலாங்கொடை நகரில் 86 வயது முதியவர் ஒருவர் பௌத்த அறநெறி இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
அரசசேவையில் இருந்து ஓய்வுபெற்ற பி.ரிச்சேர்ட் என்ற மேற்படி முதியவர் அறநெறி பாடசாலை ஆசிரியராக இருந்தபோதும் அறநெறி பரீட்சைக்குத் தோற்றி பட்டம்பெற்றிருக்கவில்லை. இந்நிலையில் எப்படியாவது பட்டம் பெற்றுவிடவேண்டும் என வைராக்கியம் கொண்ட அவர் நேற்றையதினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற அகில இலங்கை அறநெறி இறுதியாண்டு பரீட்சைக்குத் தோற்றினார். பரீட்சை மண்டபத்தில் ரிச்சேட்டுடன் கூடவே பரீட்சை எழுதியவர்கள் அவரைவிட 60 முதல் 65 வரை வயது குறைந்தவர்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’