
கிளிநொச்சியில் குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி உயிரிழந்தார்.
வன்னியில் தற்போது மீளக்குடியேற்றம் இடம்பெற்றுவரும் நிலையில் கிளிநொச்சியிலுள்ள உதயநகர் பகுதியில் மீளக்குடியேறிய குடும்பம் ஒன்றில் இடம்பெற்ற தகராறில் பெண் ஒருவர் தனது கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி பரிதாபமாக மரணமடைந்தள்ளார். நேற்று மதியம் கிளிநொச்சி உதயநகர்ப் பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் எல்.அமிர்தகௌரி (65) என்ற குடும்பப் பெண்ணே மரணமடைந்தவராவார். குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சினை காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் மீது சரமாரியாக கத்தியால் குத்தியதாகவும் முதுகுப் புறமாக பலத்த கத்திக் குத்துக்கிலக்கான அப்பெண் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’