வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 பிப்ரவரி, 2010

TNA கனகசபை அரசியலிலிருந்து ஓய்வு!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாகவும், தன்னை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதற்காக வாக்களித்த 57 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களுக்கும், தனது பதவிக் காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய மக்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக அறிவித்துள்ளார்.

தான் அரசியலில் இருந்து முற்றாக ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த. கனகசபை மேலும் தெரிவிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாடி மேற்கொண்ட முடிவின் பிரகாரம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’