மட்டக்களப்பு கரடியனாறு வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன், பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய ஆகியோர் இன்று பார்வையிட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்
.இவர்களுடன் மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் செயலாளர் சாந்தினி பெரோ, மீள் குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான பி.ரவீந்திரன், உருத்திர மலர் ஞானபாஸ்கரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இவர்கள் பாதிக்கப்ட்டவர்களைப் பார்வையிட்டு அவர்களின் உடல் நலன்கள் குறித்து உரையாடியுள்ளனர்.
வைத்திய நிலைமை குறித்து போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எம்.முருகானந்தம், மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக வைத்திய பீட பீடாதிபதியும், போதனா வைத்தியசாலை சிரேஸ்ட வைத்தியருமான கருணாகரன் ஆகியோருடனும் கலந்துரையாடினர்.
மட்டக்களப்பு வைத்தியசாலையில் நேற்று நடைபெற்ற வெடிவிபத்தில் காயமடைந்து 44 பேர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 4பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஒருவர் மரணமானதாகவும் ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.
                      -
                    

  












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’