இருண்டு கிடந்த கிளிநொச்சியினை விரைவில் ஒளிமயமாக்குவோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இன்று (17) கிளிநொச்சியில் தேசத்திற்கு ஒளியூட்டுவோம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கிராமிய மின்னிணைப்பு நிலையங்கள் அறிவியல் நகர் பாரதிபுரம் போன்ற பிரதேசங்களில் திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் முன்னர் மின்சாரம் இல்லாத பிரதேசங்கள் கூட இனிவரும் காலங்களில் மின்சாரத்தை பெறும். இன்று இம்மாவட்டத்தில் நான்கு மின்னிணைப்பு நிலையங்கள் திறந்து வைக்கப்படுகிறது. மின்சாரம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று அந்த வகையில் மீள்குடியேறிய பிரதேசங்களில் மின்சாரம் வழங்கும் திட்டம் பெரும் நிதி ஒதுக்கீடுகளில் மேற்கொள்ளப்படுகிறது.
வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் மக்கள் தங்கள் வீடுகளுக்கான இலவச இணைப்பு உட்பட மின்சாரத்தை ஆறு மாதங்களுக்கு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு இலங்கை மின்சார சபையின் பணி மீள்குடியேறிய பிரதேசங்களில் திருப்திகரமானதாகவுள்ளது. அண்மையில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ச கூட மின்சார சபையின் பணியினை பாராட்டியிருந்தார். எனவே மின்சார சபை ஊழியர்களுக்கு நன்றி கூற வேண்டும். அத்தோடு அவர்களின் பணி இன்னும் இப்பிரதேசங்களில் நிறையவே தேவை எனவும் தெரிவித்தார்.
இன்று இலங்கையின் நீர் மின்சாரத்தின் தந்தை டி.கே. விமல சுரேந்திராவின் 136வது பிறந்த தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் பல்வேறு இடங்களில் மின்னிணைப்பு நிலையங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் மின்சார சபையின் வன்னி மாவட்டங்களின் பிரதம பொறியியலாளர் பிரபாகரன் வடக்கின் வசந்தம் கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளர் பிரசாத் மின்சார சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’