கம்பளை நகரில் லனம்புல மற்றும் பொல்கும்பர பகுதிகளை இன்று சனிக்கிழமை கம்பளை பொலிஸார் சுற்றி வளைத்து சோதனைக்குட்படுத்தினர்.
போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிப்பதே இதன் நோக்கமாகும்.
கம்பளை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் பெர்னாண்டோ தலைமையில் இத்தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றது. இத்தேடுதல் நடவடிக்கையில் நடவடிக்கையில் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டன.
இச்சோதனை நடவடிக்கையின் போது எட்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், சில வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்களும் மீட்கப்பட்டன.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’