வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 செப்டம்பர், 2010

பன்றிக் காய்ச்சலுக்கு இலவச மருந்து

ன்றிக் காய்ச்சல் நோயை உண்டாக்கக்கூடிய ஹெச்.1.என். 1. வைரஸ் கிருமிக்கு எதிரான தடுப்பு மருந்தை வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவசமாக வழங்க தமிழக அரசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இந்தக் கிருமி பரவியதாகக் கண்டுபிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் எழுநூற்றைம்பதைத் தாண்டியுள்ள நிலையில், மாவட்டங்கள் தோறும் ஏழை மக்களுக்கு இந்த தடுப்பு மருந்தை இலவசமாக தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இத்திட்டம் பற்றிய விபரங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிகிறது.
ரேஷன் கார்டைக் காட்டி குடும்ப வருமானத்தை நிரூபித்து ஏழை மக்கள் இலவச தடுப்பு மருந்து பெற முடியும் என்று தமிழோசையிடம் பேசிய
தமிழக அரசின் பொதுச் சுகாதாரச் சேவைகள் இயக்குநர் டாக்டர்.பொற்கைப்பாண்டியன் தெரிவித்தார்.
கடந்த ஜனவரியிலிருந்து பார்க்கையில் பன்றிக் காய்ச்சலால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் கிண்டியில் உள்ள கிங்ஸ் தடுப்பு மருந்து ஆய்வகத்தில் சலுகை விலையில் இந்த தடுப்பு ஊசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’