
ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் மாத்தறை மக்களுக்கு சேவையாற்ற அரசியலில் காலடி எடுத்து வைத்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சனத் ஜயசூரிய மாத்தறையில் பிரசித்தி பெற்ற மகாபோதி விகாரையில் இன்று முற்பகல் மதவழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் கருத்து தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்தாது மாத்தறை மக்களின் நன்மைக்காக பாடுபடுவேன். நாட்டுக்காக விளையாடுவதிலும் சேவை செய்வதிலும் மகிழ்வடைகிறேன்” என அங்கு மேலும் குறிப்பிட்டார்.
சனத் ஜயசூரியவை பெருமளவிலான மக்கள் திரண்டு வரவேற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’