-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
யாழ்தேவி ரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாழ்தேவி ரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 27 மே, 2011
ஞாயிறு, 2 ஜனவரி, 2011
ஓமந்தை வரை செல்லும் யாழ்தேவி புகையிரத சேவை
கொழும்பு தாண்டிக்குளம் இடையில் தற்போது சேவையில் உள்ள யாழ்தேவி புகையிரத சேவை ஓமந்தை வரை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சேவை இம் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை இயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வியாழன், 16 செப்டம்பர், 2010
யாழ்தேவியில் மோதி பாடசாலை மாணவன் பலி
கம்பஹா புலுகொட பிரதேசத்தில் தந்தையை புகையிரத நிலையத்தில் இறக்கி விட்டு தனது துவிச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 16 வயது பாடசாலை மா ணவன் ஒருவன் கொழும்பு கோட்டையில் இருந்து வந்த யாழ்தேவி கடுகதி ரயிலில் மோதி ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இன்று காலை பதிவாகியுள்ளது
செவ்வாய், 29 டிசம்பர், 2009
ஏப்ரல் முதல் யாழ்தேவி ரயில் சேவை ஓமந்தை வரை நீடிப்பு : அரசு தகவல்

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக யாழ்தேவி ரயில் சேவையை ஓமந்தை வரையான குறுகிய தூரத்துக்கு நீடிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஓமந்தை வரையில் யாழ்தேவி ரயில் சேவை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நீடிக்கப்படும் என ரயில் சேவை பொது முகாமையாளர் பி.பி. விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதற்காகத் தாண்டிக்குளத்தில் இருந்து 10 கிலோமீற்றர் நீளமான ரயில் பாதைகளை மீளமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், ஓமந்தை ரயில் நிலையத்தை நிர்மாணிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகள் 400 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரையில் நீடிப்பதற்கான ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா வரையிலான ரயில் பாதை பாரிய சீர்கேடுகளுடன் காணப்படுவதாக முறைபாடுகள் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














