வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 27 மே, 2011

யாழ்தேவி ரயில் ஓமந்தையை அடைந்தது

துவரை தாண்டிக்குளம் வரை இடம்பெற்று வந்த வடமாகாணத்திற்கான யாழ்தேவி ரயில்சேவை இன்று வெள்ளிக்கிழமை ஓமந்தை வரை உத்தியோகபூர்வமாக நீடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஓமந்தை ரயில் நிலையமும் பயணிகளின் பாவனைக்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பிலிருந்து புறப்பட்ட ரயில் சற்றுமுன்னர் ஓமந்தை ரயில் நிலையத்தை அடைந்துள்ளது. இந்நிகழ்வில் போக்குவரத்து அமைச்சர் குமார் வெல்கம, போக்குவரத்து பிரதியமைச்சர் றோகன திஸாநாயக்க, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சாள்ஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வடபகுதி ரயில் பாதை புனரமைப்புப் பணி கடந்த வருடம் முதல் 'வடக்கின் வசந்தம்' திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது.
தாண்டிக்குளம் முதல் ஓமந்தை வரையிலான ரயில் பாதையினை இராணுவமும் ரயில்வே திணைக்களமும் இணைந்து புனரமைப்பு செய்தமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’