ஊ ர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்று சட்டசபை திமுக தலைவர் மு.க.சஸ்டாலின் கூறினார்.
சபாநாயகர் ஜெயக்குமாரைப் பாராட்டி இன்று சட்டசபையில் ஸ்டாலின் பேசுகையில்,
சட்டசபையின் தலைவராக ஏகமனதாக தேர்ந்து எடுக்கப்பட்ட சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தையும், வரவேற்பையும் தி.மு.க. சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் ஆளும் கட்சி வரிசையிலும், எதிர்க்கட்சி வரிசையிலும் இருந்து இருக்கிறீர்கள். சட்டம் படித்து இருக்கிறீர்கள்.
எனவே ஆளும் கட்சியின் நோக்கத்தையும் எதிர்க் கட்சியின் உணர்வுகளையும் மதித்து கடமையாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.
5 விரல்கள் இருந்தாலும் அவை ஒன்று சேர்ந்தால் தான் பயன்கிடைக்கும் என்று பேரறிஞர் அண்ணா சொல்லி இருக்கிறார். பெரிய தேராக இருந்தாலும் அதற்கு சிறிய அச்சாணி முக்கியம். எனவே எண்ணிக்கை சிறிது என்று எடுத்துக் கொள்ளாமல் அனைத்து கட்சிகளையும் மதித்து வழி நடத்துவீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
இந்த பாரம்பரியம் கொண்ட இந்த அவையில் எத்தனையோ சபாநாயகர்கள் இருந்து இருக்கிறார்கள். என்றாலும் கிருஷ்ணாராவ், புலவர் கோவிந்தன், சி.பா.ஆதித்தனார், பழனிவேல் ராஜன் ஆகியோர் வரலாறு படைத்தனர். அதுபோல் நீங்களும் சிறப்பாக இடம்பெற வேண்டும்.
ஊர் கூடி தேர் இழப்பதுபோன்று ஜனநாயக தேரை இழுத்துச் செல்ல திமுக உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள்
சபாநாயகருக்கும், துணை சபாநாயகருக்கும் எனது வாழ்த்தை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஸ்டாலின்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’