வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
நாமல் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாமல் ராஜபக்ஷ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 15 டிசம்பர், 2011

ஜனாதிபதியின் மகன் சட்டத்தரணியாக பதவியேற்பு (பட இணைப்பு)


பா
ராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ இன்று பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க முன்னிலையில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

செவ்வாய், 13 டிசம்பர், 2011

ஐ.ரீ.என்.ஐ ராஜபக்ஷவின் குடும்ப தொலைக்காட்சியாக்க வேண்டாம்: நாமல்


சுயாதீன தொலைக்காட்சி (ஐ.ரீ.என்) அலைவரிசையினை ராஜபக்ஷ குடும்பத்தினரின் தொலைக்காட்சியாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திங்கள், 19 செப்டம்பர், 2011

நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலராக 'நடித்தவர்' கைது

நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் எனக் கூறிக்கொண்டு பலரை ஏமாற்றிய நபர் ஒருவரை காலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

புதன், 27 ஜூலை, 2011

யாழில் மாபெரும் வரவேற்பு விழா நாமல் ராஜபக்ஷ எம்.பி. பங்கேற்பு

யா ழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலையை அமைப்பதற்குத் தேவையான நிதியைச் சேகரிக்கும் முகமாக தெய்வேந்திர முனையிலிருந்து பருத்தித்துறை முனைவரை நடைபயணமாக வருகை தந்தோருக்கான மாபெரும் வரவேற்பு விழா நாளை 27 ஆம் திகதி புதன்கிழமை காலை 11.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

திங்கள், 24 ஜனவரி, 2011

வழிபாட்டுத் தலங்களில் அரசியல் வேண்டாம்: நாமல் ராஜபக்ஷ

த வழிபாட்டுத் தலங்களை அரசியலுக்காகப் பயன்படுத்தக் கூடாது என ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நாமல் குழுவினர் கிளிநொச்சி விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்டுள்ளனர்.

வியாழன், 13 மே, 2010

நாமல் ராஜபக்ச உட்பட்ட எம்.பிக்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்

பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம்செய்து விசேட பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

புதன், 5 மே, 2010

அவசரகாலச் சட்டத்தினால் இளைஞர் யுவதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்- நாமல் ராஜபக்ஷ _


அவசரகாலச் சட்டத்தினால் என்னை போன்ற இளைஞர், யுவதிகள் தான் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இந்த அவசரகாலச் சட்டத்தை நீக்க வேண்டியதன் நேரம் நெருங்கியுள்ளது- எனினும் உடனடியாக செய்ய முடியாது என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது கன்னி உரையில் தெரிவித்தார்.

புதன், 24 பிப்ரவரி, 2010

நான் அரசியலில் இறங்கியமை எதிர்க்கட்சிகளின் சேறு பூசல்களினாலேயே என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.


அரசியலில் ஈடுபடுவதற்கு தமது தந்தை காரணமல்ல எனவும் எதிர்க்கட்சிகளின் சேறு பூசல் நடவடிக்கைகளையே அரசியலில் ஈடுபட உந்தியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் அச்சுறுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் ஜனாதிபதி மீது கொண்ட பேராபிமானத்தினால் சுயாதீனமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். எதிர்க்கட்சிகளினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கிலேயே பிரபல கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரியவும் அரசியலில் களமிறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே தனது தந்தை வெற்றியீட்டியிருந்ததாகவும் அதனை மாபெரும் வெற்றியாக மாற்றும் நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி அடைந்துள்ள வெற்றியின் ஆதிக்கத்தை பாராளுமன்றம் வரையில் வியாபிக்க வேண்டும் எனவும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் களமிறங்க எதிர்க்கட்சிகளே தம்மைத் தூண்டியதாகவும் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் காரியாலயமொன்றின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

நாமல் ராஜபக்ஷ பொதுத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானம்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது விண்ணப்பப்படிவத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் முன்னணியிடம் இன்று கையளித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக 'இளைஞர்களுக்கு நாளை' அமைப்பின் செயலாளர் அசேல திஸாநாயக்க அரச தகவல் திணைக்களத்துக்குத் தெரிவித்துள்ளார்.