வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நாமல் குழுவினர் கிளிநொச்சி விஜயம்

நாடாளுமன்ற உறுப்பினரும் இளைஞர்களுக்கு நாளை அமைப்பின் தலைவருமான நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று கிளிநொச்சி மாவட்டத்துக்கான விஜயமொன்றை மேற்கொள்டுள்ளனர்.

அப்பிரதேசத்தில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் அங்குள்ள மக்களுக்கான தேவைகள் குறித்து மதிப்பீடு செய்வதற்காக இந்த குழிவினர் நான்கு தினங்கள் கிளிநொச்சியில் தங்கியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் அங்குள்ள பாடசாலைகளுக்கு நேரில் சென்று நிலைமைகளை கண்டறியவுள்ளனர்.
இந்நிலையில், கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை போன்ற கல்விக் கோட்டங்களிலுள்ள சில பாடசாலைகளுக்கு அவர்கள் விஜயம் செய்யவுள்ளனர் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங அதிபர் திருமதி.ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். இந்த குழுவினரை அரச அதிபர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’