ராமேஸ்வரத்தில் தி.மு.க.,நகராட்சி தலைவர் சொந்தமான கட்டடத்தில் "கேங் ரேப்பிங் ' கில் ஈடுபட்ட நகராட்சி தலைவர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட் உத்தரவிட்டது.இதற்கிடையே, மருத்துவ சோதனைக்காக அழைத்து செல்லப்பட்ட இவர்கள், ராமநாதபுரம் தலைமை மருத்துவமனையில் "அட்மிஷன்' போட்டு, அங்கேயே தங்கி உள்ளனர்.
இதற்கு முன் பல்வேறு குற்ற வழக்குகளில் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பிய ஜலீலை, கற்பழிப்பு சம்பவத்தில் தப்பக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்ட போலீசார் , ராமேஸ்வரம் டி.ஸ்.பி., கமலாபாய்க்கே தெரியாமல், இந்த "ஆபரேசனை' முடித்துள்ளனர். வழக்கமாக குற்றச்சம்பவங்களில் ஜலீல் ஈடுபட்ட போதெல்லாம் அவரை தப்பவைக்க ,ராமேஸ்வரம் டி.எஸ்.பி., உறுதுணையாக இருந்துள்ளதாக, ஏற்கனவே உயர் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் புகார் உள்ளது. ஜலீலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் எதிர் கட்சியினர் பல்வேறு சம்பவங்களில், புகார் செய்வது, ஆர்ப்பாட்டம் நடத்துவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.
இந்நிலையில், கும்பலால் நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட யாஷ்மின்பானு, தகுந்த ஆதாரங்களுடன் ராமநாதபுரம் எஸ்.பி.,பிரதீப்குமாரிடம் புகார் கொடுக்கவே, இவரது புகாரின் படி நடவடிக்கை எடுக்க ராமேஸ்வரம் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவிட்டார். "கேங் ரேப்பில்' ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை, வேறு யாருக்கும் தெரியக்கூடாது என்றும், முக்கியமாக ராமேஸ்வரம் டி.எஸ்.பி., க்கு தெரியக்கூடாது என்ற உத்தரவும் மேலிடத்தில் இருந்து வந்துள்ளது.
இதனிடையே ஜலீலை கைது செய்ய தமிழக முதல்வரிடமும் அனுமதி கேட்கப்பட்டு, "கிரீன் சிக்னல்' கிடைத்தவுடன்தான் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம்,சேசு ஆகியோர் நள்ளிரவு 11 மணிக்கு ஜலீல் உள்ளிட்டஆறு பேரை கைது செய்துள்ளனர். மறுநாள் காலை ஐந்து மணிக்குத்தான் டி.எஸ்.பி.,உள்ளிட்ட சக போலீசாருக்கு இது தெரியவந்துள்ளது. செய்வதறியாது திகைத்த தி.மு.க.,பிரமுகர்களும் அமைச்சர், எம்.பி.,என பலதரப்பினரின் சிபாரிசையும் எதிர்பார்த்தனர். ஆனால், அது நடக்காது என தெரிந்தபின், சிறைக்கு செல்வதையாவது தள்ளிப்போடுவோம் என இரண்டு நாட்களாக மருத்துவமனையில் நாட்களை கடத்திவருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த "ஹம்லா ஆபரேசனில்' கோட்டைவிட்டதில் துவண்டுபோன ராமேஸ்வரம் போலீசாரோ, நகராட்சி தலைவர் ஆபரேசனை(கைது) சாதித்துவிட்டோம் என்ற சந்தோஷத்தில் உள்ளனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’