வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

நாமல் ராஜபக்ச உட்பட்ட எம்.பிக்கள் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம்

பாராளுமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் அண்மையில் கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம்செய்து விசேட பரீட்சார்த்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்வாறாக பாராளுமன்ற உறுப்பினர் பலர் கலந்துகொண்டமை இதுவே முதல்தடவையாகும். துறைமுக மற்றும் விமானசேவை பிரதியமைச்சர்களான தயாஸிரீத திசேரா, ரோஹித அபேகுணவர்தன ஆகியோர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இலங்கை துறைமுக அதிகாரசபையினால் 425மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்படும் கொழும்பு தெற்கு துறைமுக திட்டம் இப்பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட அவதானத்திற்குள்ளாக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பிரியத் பீ. விக்கிரம இத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றிய விவரங்களை விளக்கியுள்ளார். இங்குள்ள பல விஷேட திட்டங்கள் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் பரீட்சார்த்தத்துக்கு உள்ளாக்கப்பட்டது. இங்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டது யாதெனில், தற்போது பகல் நேரங்களில் மட்டும் திறந்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக வடக்கு உட்புகு நுழைவாயில் இரவுநேரங்களிலும் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்படைக்கு அறிவுறுத்தப்பட்டது. இனிவரும் காலங்களில் 24 மணித்தியாலங்களும் துறைமுக பிரவேசங்கள் இரண்டும் திறந்து வைக்கப்படும் என்பதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’