வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

பார்வதி அம்மாளுக்கு கொழும்பில் சிகிச்சை-சிவாஜிலிங்கம்


கொழும்பு: பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் உடல் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அவருக்கு கொழும்பு நகரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக இலங்கை முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
பக்கவாத நோயால் அவதிப்பட்டு வரும் அவர் மலேசியாவில் இருந்து சென்னைக்கு சிகிச்சைக்கு வந்தபோது மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டார். இந் நிலையில் மலேசியாவில் இருந்து இலங்கை திரும்பினார். அவர் வல்வெட்டித் துறையில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் கொழும்பில் உள்ள ஒரு தனியார் ஆயுர்வேத விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவாஜிலிங்கம் கூறுகையில், பார்வதி அம்மாளுக்கு கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக பக்கவாத நோய் உள்ளது. அவரை பராமரிக்கும் முழு பொறுப்பையும் அவரது குடும்பத்தினர் என்னிடம் ஒப்படைத்துள்ளனர். பார்வதி அம்மாள் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. நடமாடும் சக்தியை இழந்து விட்டார். படுத்த படுக்கையாக கிடக்கும் அவரால் பேசவும் முடியவில்லை. அவரை இந்தியாவுக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுப்பது பற்றி நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. அவரது மகள் என்ன சொல்கிறாரோ அதன்படிதான் செயல்படுகிறோம்.இந்தியாவில் சிகிச்சை பெற்றுக் கொள்ள விசா கொடுக்கப்பட்டுள்ளதை பார்வதி அம்மாள் நிராகரித்து விட்டார் என்ற தகவல்களில் உண்மையில்லை.அவரை இந்தியா கொண்டு சென்று சிகிச்சை கொடுக்கும் நடவடிக்கைகளில் சில தடங்கல்கள்தான் ஏற்பட்டுள்ளன என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’