வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 13 மே, 2010

பௌதீக வளங்களுக்கேற்ப ஆளனி வழங்களும் சமமாக இருக்கின்ற போது திணைக்களங்கள் தமது பணிகளை சீராக முன்னெடுக்க முடியும்-கிழக்கு மாகாண முதலமைச்சர்.


திருமலை மாவட்ட வெருகல் பிரதேச சபைக் கட்டிடத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் திறந்து வைத்து உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். வெருகல் பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்.
மிகவும் பின்தங்கிய பிரதேசமாக இருக்கின்ற இவ் வெருகல் பிரதேசத்தில் இருக்கின்ற அரச திணைக்களங்கள் மிகவும் கடினமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக பௌதீக வளங்கள் எல்லாம் இத்திணைக்களங்களில் இருக்கின்ற போதும் ஆளனி வளங்கள் இல்லாமல் இருப்பதனால் அவ் அலுவலகங்கள் சீராக இயங்க முடியாது இருக்கின்றது. ஆனால் இனிவருகின்ற காலங்களில் ஆளனி உள்ளுராட்சி திணைக்களங்கள் அனைத்திற்கும் மாகாண சபை ஊடகமாக ஆளனி நியமனம் செய்யப்படுகின்ற போது இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். அதே நேரம் எம்மிடம் இருக்கின்ற வளங்களை நாம் சீராக பயன்படுத்துகின்ற போது நாம் எதிர்பார்க்கின்ற அபிவிருத்திகளை எட்ட முயும் எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் கூடிய அபிவிருத்தி வேண்டி நிற்கவேண்டும்


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’