-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
புதன், 24 பிப்ரவரி, 2010
நான் அரசியலில் இறங்கியமை எதிர்க்கட்சிகளின் சேறு பூசல்களினாலேயே என நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.
அரசியலில் ஈடுபடுவதற்கு தமது தந்தை காரணமல்ல எனவும் எதிர்க்கட்சிகளின் சேறு பூசல் நடவடிக்கைகளையே அரசியலில் ஈடுபட உந்தியதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில் கலைஞர்களையும் விளையாட்டு வீரர்களையும் அச்சுறுத்தி பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என்பதுடன் கலைஞர்களும் விளையாட்டு வீரர்களும் ஜனாதிபதி மீது கொண்ட பேராபிமானத்தினால் சுயாதீனமான முறையில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர். எதிர்க்கட்சிகளினால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் நோக்கிலேயே பிரபல கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரியவும் அரசியலில் களமிறங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே தனது தந்தை வெற்றியீட்டியிருந்ததாகவும் அதனை மாபெரும் வெற்றியாக மாற்றும் நடவடிக்கைகளையே தாம் மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி அடைந்துள்ள வெற்றியின் ஆதிக்கத்தை பாராளுமன்றம் வரையில் வியாபிக்க வேண்டும் எனவும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் களமிறங்க எதிர்க்கட்சிகளே தம்மைத் தூண்டியதாகவும் அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தேர்தல் காரியாலயமொன்றின் அங்குரார்ப்பண வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’