
தற்கொலைக் குண்டுதாரிகள் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாக பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். யுத்த இறுதிக்கட்டத்தில் புலிகளின் தற்கொலைக் குண்டுப் போராளிகள் தலைநகர் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாகவும், அவர்கள் பற்றிய தகவல்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தற்கொலைக் குண்டுதாரிகள் கொழும்பிற்குள் ஊடுறுவியுள்ளதாக புலனாய்வுப்பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான உறுப்பினர்கள் தொடர்பில் தேடுதல் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் அவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்கொலை குண்டுதாரிகளின் பிரசன்னம் மிகவும் ஆபத்தானது. ஒவ்வொரு இடமாக குறித்த நபர்கள் நகர்ந்து செல்வதினால் அவர்களை கைது செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுகிறது. குண்டுகள் இருந்தால் எந்த நேரத்திலும் அவர்கள் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடும். இதன்காரணமாகவே தொடர்ச்சியாக பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’