வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 24 பிப்ரவரி, 2010

மூன்று மாதங்களுக்குள் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு.


வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதத்திற்குள் வேட்பாளர்கள் தங்களது சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரியப்படுத்தியுள்ள ஆணையாளர் சகல வேட்பாளர்களும் கட்டாயமாக பூரண சொத்து விபரங்களை வெளியிட வேண்டுமென்பதுடன் கட்சிச் செயலாளர்கள் மற்றும் சுயாதீனக் குழுத் தலைவர்களின் ஊடாக சொத்து விபரங்களை வெளியிட முடியும் என தெரிவித்துள்ளார். மேலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததன் பின்னர் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அமைச்சராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் விபரங்களை ஒப்படைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’