வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூன், 2011

வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும்: மாவை _

ஜ னநாயகம், மனித உரிமைகள் மற்றும் அரசியல் உரிமைகளுக்காக வடக்கு, தெற்கு மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். சிவில் நிர்வாகத்துக்கு இடமளித்து வடக்கிலிருந்து இராணுவத்தை அரசாங்கம் உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

மோசமான சூழ்நிலையிலும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசத் தயார்: மாவை

மோ சமான சூழ்நிலையிலும் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேசத் தயார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வியாழன், 31 மார்ச், 2011

கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் அடுத்த மாதம் கையளிக்கப்படும்: மாவை _

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கலை கோருமாறு இந்திய மத்திய அரசு தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,

வியாழன், 3 மார்ச், 2011

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்கு தீர்வாகாது: மாவை சேனாதிராஜா

அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற போதிலும் மக்களின் ஆணையினை மீறும் வகையில் நாம் ஒரு போதும் செயற்படமாட்டோம். 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவோ அடிப்படையாகவோ அமைய முடியாது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி. யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திங்கள், 28 பிப்ரவரி, 2011

பிரதேச சபைகளுக்குள்ள நிறைவேற்று அதிகாரம் வேண்டும்: மாவை சேனாதிராஜா

பாராளுமன்ற உறுப்பினர்களைவிட பிரதேச சபைகளுக்கு அதிக நிறைவேற்று அதிகாரம் இருக்கின்றது. பிரதேச சபைகளின் ஊடாக மக்களுடைய அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். எனவே எமது மக்களின் அடிப்படைத் தேவைகளை மக்களின் பிரதிநிதிகளே நிறைவேற்றக் கூடிய இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெரும்பான்மையான ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றியடையும் வகையில் வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என வவுனியா மாவட்ட பிரதேச சபைகளுக்கான தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் மத்தியில் உரையாற்றிய யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

திங்கள், 27 டிசம்பர், 2010

தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின வைபவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

புதன், 22 டிசம்பர், 2010

அகதி முகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பெரும் அவலம்: மாவைசேனாதிராஜா

வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் அகதிமுகாம்களில் உள்ள மக்கள் மழையினால் பாதிக்கப்பட்டு பெரும் துன்பங்களை எதிர்நோக்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராஜா எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்

வெள்ளி, 10 டிசம்பர், 2010

யாழ். பல்கலைக்கழகத்தை தரமுயர்த்துவதற்கு தமிழர்களின் வரிப்பணத்தை பயன்படுத்தலாம்: மாவை

உலகத் தரத்திற்கு உயர்த்துவதற்கு இலங்கையிலுள்ள ஆறு பல்கலைக்கழகங்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவையாவும் தென்னிலங்கையை சேர்ந்தவையாகும் என்பதுடன் யாழ். பல்கலைக்கழக த்தை உலக தரத்திற்கு உயர்த்துவதற்கு தமிழ் மக்களின் வரிப் பணத்தை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புதன், 8 டிசம்பர், 2010

1,60,000 பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்:மாவை எம்.பி _

மீள்குடியேற்றப்படுவதற்கு இன்னும் 23 ஆயிரம் பேரே எஞ்சியிருப்பதாக அரசு கூறியிருக்கின்றபோதிலும் ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தற்காலிக தங்குமிடங்களிலோ அல்லது உறவினர்,நண்பர்களது வீடுகளிலோ தங்கியிருக்கின்றனர் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் தெரிவித்தார்.

வெள்ளி, 24 செப்டம்பர், 2010

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வேண்டும்-மாவை சேனாதிராஜா எம்.பி

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் வன்னி மக்கள் அளித்த சாட்சியத்தை இராணுவப் பேச்சாளர் மறுத்துள்ள நிலையில் அந்த மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எமக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, சாட்சியமளித்த மக்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதமளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான மாவை சேனாதிராஜா நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை - மாவை

தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துரையாடுவதற்கான எவ்வித அழைப்பிதழ் எதுவும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.