வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 31 மார்ச், 2011

கூட்டமைப்பின் தீர்வுத் திட்டம் அடுத்த மாதம் கையளிக்கப்படும்: மாவை _

மிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின் போது அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பாலான அதிகாரப் பரவலாக்கலை கோருமாறு இந்திய மத்திய அரசு தமக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ள கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா,
அரசாங்கத்திடம் கையளிப்பதற்கென தீர்வுத் திட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தொடர்பினை ஏற்படுத்திக்கொண்ட அவர், அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்ற சந்தர்ப்பத்தில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கும் அப்பாலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைக்குமாறு எமக்கு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும் 13 ஆவது திருத்தச் சட்டமானது தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான தீர்வுக்கு அடிப்படையாக அமையாது. அத்துடன் இந்த திருத்தத்தில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை.

அது தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதாகவும் அமையாது.

இதேவேளை, மேற்படி திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறான பொலிஸ் அதிகாரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேரடியாகவே தெரிவித்திருக்கின்றார்.
இந்நிலையில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கின்ற அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கையளிக்கப்படுவதற்காக தீர்வுத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் மாவை எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’