வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
தம்பர அமில தேரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தம்பர அமில தேரர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

நாட்டை பிளவுபடுத்திய கருணாஅம்மான் தற்போது சொகுசு வாழ்க்கை வாழும் போது முன்னாள் இராணுவத் தளபதியின் நிலையோ பரிதாபம் -தம்பர அமிலதேரர்

யுத்தக் காலத்தில் தயா மாஸ்டரை கொழும்புக்கு கொண்டு வந்து சிகிச்சையளிக்க அரசாங்கம் அனுமதியளித்தது. ஆனால் யுத்தத்தையே வெற்றிக் கொண்ட முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு சிகிச்சையளிக்க அனுமதியளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த தம்பர அமிலதேரர் தெரிவித்துள்ளார்

வியாழன், 1 ஏப்ரல், 2010

ஆங்கிலத்தில் வெள்ளையர்களிடம் மண்டியிடும் மஹிந்த அரசு சிங்களத்தில் தூற்றுகிறது: தம்பர அமில தேரர்

ஆங்கிலத்தில் வெள்ளையர்களிடம் மண்டியிடும் இந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம், சிங்கள மொழியில் அவர்களை தூற்றுவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சக்திகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிடும் இந்த அரசாங்கமே அதிகளவு வெளிநாட்டு தலையீடுகளுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் : தம்பர அமில தேரர்


நாடு தற்போது ஜனநாயக விரோத பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது குரோத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கைதினை எதிர்த்து மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சகல மக்களும் அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு முக்கிய இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த பொன்சேகா, நாட்டு மக்களின் தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் குரோதம் காரணமாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, தண்டனை வழங்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்