வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 12 பிப்ரவரி, 2010

ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும் : தம்பர அமில தேரர்


நாடு தற்போது ஜனநாயக விரோத பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், இதற்கு எதிராக நாட்டு மக்கள் அணி திரள வேண்டும் எனவும் தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாகவும், இது குரோத அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தக் கைதினை எதிர்த்து மாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சகல மக்களும் அணி திரள வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு முக்கிய இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த பொன்சேகா, நாட்டு மக்களின் தேசிய வீரராகக் கருதப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் குரோதம் காரணமாக அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, தண்டனை வழங்க முயற்சிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’