ஆங்கிலத்தில் வெள்ளையர்களிடம் மண்டியிடும் இந்த மஹிந்த ராஜபக்ச தலைமையிலான இந்த அரசாங்கம், சிங்கள மொழியில் அவர்களை தூற்றுவதாக தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் தம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சக்திகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிடும் இந்த அரசாங்கமே அதிகளவு வெளிநாட்டு தலையீடுகளுக்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் நிழல் வெளியுறவுச் செயலாளர் லியாம் பெஸ்கோ இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு நிதி அனுசரணை வழங்கிய அரசாங்கம் மறுபுறத்தில் விமான நிலையத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கம் மக்களை பிழையான வழியில் இட்டுச் செல்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவை காப்பாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’